NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / அறிவிப்பு பலகை

அறிவிப்பு பலகை

தோட்டக்கலை துறை அதிகாரி பணியிட தேர்வு ரத்து

தோட்டக்கலை துறை அதிகாரி உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த எழுத்துத் தேர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ரத்து …

Read More »

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காக 79, 78,429 பேர்

தமிழகத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காக 79, 78,429 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பதாக, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறினார். தமிழகம் முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்திருக்கின்றனர். இதில், 20.69 லட்சம் பேர் 18 வயதுக்குள்பட்டவர்கள். 18 முதல் …

Read More »

தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நிறைவு

பல்வேறு துறைகளுக்கான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6,962 மையங்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டன. புதிய முயற்சியாக தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் ஆகிய விபரங்கள் அச்சடிக்கப்பட்ட விடைத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம், தவறான பதிவெண் எழுதுபவர்களுக்கு மதிப்பெண் குறைக்கும் நடவடிக்கை தவிர்க்கப்படும். மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கால …

Read More »

3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடத்துக்கு நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மார்ச் 11-ஆம் தேதி எழுத்துத் தேர்வை நடத்த உள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.   தமிழக காவல் துறையில் ஆயுதப் படையில் 5,538 மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள …

Read More »

டிஎன்பிஎஸ்சி-யின் 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தனது வருடாந்திர (2018) கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த அட்டவணையின் கீழ் டிஎன்பிஎஸ்சி நடப்பாண்டில் நடத்தும் தேர்வுகள் தேதி, காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தங்களின் தகுதிக்கான பணிகளுக்கான தேர்வுக்கு தயார் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.   இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தப்பட்டியலில் 3223 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 23 பணிகள் மற்றும் பதவிகளுக்கான அறிவிக்கை மற்றும் …

Read More »

பச்சை குத்தியிருந்தால் இந்திய விமானப் படையில் சேர முடியாது

பச்சை குத்தியிருந்தால் இந்திய விமானப் படையில் சேர முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய விமானப் படையில் எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த நபரின் கையில் அழிக்க முடியாத பச்சை குத்தியிருந்ததால் வேலையைவிட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து, பணி நீக்க உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஹீமா …

Read More »

தபால் நிலையங்களில் பதிவு செய்தால், தனியார் நிறுவனங்களில் வேலை! புதிய திட்டம்!

வேலைதேடி அலைபவரா நீங்கள்? உங்களுக்கான இனிப்பான செய்திதான் இது! அருகில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களுக்குச் சென்று, உங்கள் விவரங்களைப் பதிவுசெய்தால் போதும். இனி நீங்கள் வேலைதேடி அலையத் தேவையில்லை. உங்கள் தகுதிக்கேற்ற வேலை, தனியார் நிறுவனங்களிலிருந்து உங்கள் வீடுதேடி வரும். அரசுத் துறைகளில் வேலை என்பது பெரும்பாலான இளைஞர்களுக்குப் பெருங்கனவாகி விட்டது. படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ற அரசு வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. அதே நேரத்தில், ஊழியர்களின் …

Read More »

50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்கள் தேர்வு: ரயில்வே விரைவில் அறிவிப்பு

2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு www.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் வாயிலாக பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் 18 முதல் 31 வயது வரை தகுதியாக நிர்ணயிக்கப்படும். அரசு …

Read More »