NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / ALL JOBS / தமிழக அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு அது குறித்த தகவல்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மட்டும் 2,223 காலியிடங்கள் உள்ளன.

பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு: தமிழ்-299; ஆங்கிலம் – 237; கணிதம் – 468; அறிவியல் – 731; சமூக அறிவியல் – 488 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆசிரியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில், 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும், 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. தகுதிகாண் மதிப்பெண் முறையில், தகுதித்தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட். மதிப்பெண்-க்கு 40 சதவீதமும் “வெயிட்டேஜ்’ அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு ஆப்- ஐ பயன்படுத்துகிறீர்கள் ..தயவு செய்து புதிய ஆண்ட்ராய்டு ஆப் அப்டேட் செய்யுங்கள் DOWNLOAD
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

Check Also

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில்

Want create site? Find Free WordPress Themes and plugins.தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி …

One comment

  1. Hey this is kind of of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with
    HTML. I’m starting a blog soon but have no coding experience so I wanted to
    get guidance from someone with experience.
    Any help would be greatly appreciated! http://peacespares.com/component/k2/itemlist/user/2020792.html

Leave a Reply

Your email address will not be published.