NEW: Free Whatsapp Groups Share

Home / Police Exam / Police Exam Notification

Police Exam Notification

Want create site? Find Free WordPress Themes and plugins.
அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள Whatsapp Group:Click Here

Police Exam Notification / POLICE சமீபத்திய அறிவிப்பு

 விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்தமான பதவிகளை வரிசைப்படி விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். முன்னுரிமை மற்றும் மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்

Police Exam Notification

 

தேவையான தகுதி:Police Exam Notification

  1. குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். பி.சி., எம்.பி.சி. பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
  2. ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு 35 ஆகும். உடற்கூறு தகுதியைப் பொறுத்தவரையில் உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ. இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர் எனில் 167 செ.மீ. போதுமானது.
  3. அனைத்து வகுப்பினருக்கும் மார்பளவு 81 செ.மீ. விரிவடையும் நிலையில் 86 செ.மீ. இருக்க வேண்டும். பெண்களுக்குக் குறைந்தபட்ச உயரம் 159 செ.மீ. ஆகும்
  4. எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு அமைந்திருக்கும்.

தேர்வு முறை :Police Exam Notification

  1. முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 80 மதிப்பெண். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, உளவியல் பாடங்களில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
  2. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ‘ஒரு காலியிடத்துக்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் அடுத்த கட்ட தேர்வுகளான உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் தேர்வு ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவர்.
  3. உடல் திறன் போட்டிகளில் ஆண்களுக்குக் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் இடம்பெறும்.
  4. பெண்களுக்கு நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.
  5. எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண், உடற்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண். என்.சி.சி., என்.எஸ்.எஸ். ஈடுபாடு, விளையாட்டு ஆகியவற்றுக்கு 5 சிறப்பு மதிப்பெண் என மொத்த மதிப்பெண் 100.
  6. விண்ணப்பப் படிவங்கள் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தபால் நிலையங்களில் கிடைக்கும்.
  7. எழுத்துத் தேர்வு முடிவுகள் www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் (நேற்று) வெளியிடப்பட்டது.
  8. உடல்கூறு அளத்தல் – உடல்தகுதி தேர்வு – உடற்திறன் போட்டிகள் ஆகியவை அடுத்தகட்ட தேர்வுகள் ஆகும்.

Police Exam Notification

  1. இரண்டாம்கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இக்குழுமத்தின் மேற்கூறிய இணையதள முகவரியிலிருந்து தங்களது சேர்க்கை எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  2. தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் வெளியிடப்படமாட்டாது.
  3. இரண்டாம்கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்படாதவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை சேர்க்கை எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு 12-7-2017 முதல் தெரிந்துகொள்ளலாம்.
  4. அடுத்தகட்ட தேர்வுகளான உடல்கூறு அளத்தல் – உடல்தகுதி தேர்வு- உடற் திறன் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் 15 மையங்களில் நடைபெறவுள்ளது.
  5. மேற்படி உடல்கூறு அளத்தல் – உடல்தகுதி தேர்வு – உடற் திறன் போட்டித் தேர்வில் விண்ணப்பதாரர்கள் நடைமுறையில் உள்ள விதியின்படி 1:5 என்ற விகிதாசாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *